Monday, 4 February 2019

அடையாள அட்டை

அடையாள அட்டை


என் பன்னிரெண்டாம் வகுப்பில் ஒரு நாள் காலை இடை வெளி முடிந்த பின் வகுப்பு தோழர்கள் அனைவரும் தங்களின் இருக்கைகளை நிறப்பி கொண்டு இருந்தோம். எங்களின் வகுப்பு மற்றும் தாவரவியல் ஆசிரியருமான அர்ச்சுனுன் சாரின் நேரம் அது. பொங்கல் பண்டிகை கழித்து ஓர் இரு நாளில் நம் வீட்டு வாசலில் எவ்வாறு வர்ண கோல பொடிகள் ஒரு புறமாக குவிந்து இருக்குமோ அதேபோல் எங்கள் அர்ச்சுனன் சார் பல வர்ண சுன்னக்கட்டிகளை கொண்டு வரைந்த ஒரு மற்றும் இரு வித்திளை குறுக்கு மற்றும் நெடுக்கு வெட்டு தோற்றங்களை  அழித்ததனால் கரும்பலகையின் கீழ் குவிந்து கிடந்தன வர்ண பொடிகள். அந்நேரம் அர்ச்சுனன் சார்க்கு கல்யாணம் முடிந்து மூன்று மாதம் ஆயிற்று என்று கருதுகிறேன். அர்ச்சுனன் சார் வகுப்பினுள் வந்தார், வகுப்பு ஆசிரியர் அல்லவா அனைவரையும் சில நொடி பொழுத்திற்குள் கண்டு முடித்தார். பக்கத்தில் என் நண்பன் T.அருள்(சின்னசேலம்) என்னை சின்டினான். என்னென்று தலையை உயர்த்தி பார்த்தால் மஹாபாரத அர்ச்சுனர் எவ்வாராக அம்பை குறி பார்ப்பரோ அவ்வாராகவே சாரின் ஆள் காட்டி விறல் என்னை நோக்கி இருந்தது. "மாட்னென் டா இன்னைக்கு" நினைத்துக்கொண்டு எழுந்திரிக்கும் பொழுதே கண்கள் அனைத்தையும் சரி பார்க்க தொடங்கிற்று டய், சட்டையின் மேல் முதல் பட்டன், பெல்ட், காலணி...... ID Card...?????? ID card அ காணோம்.... ஆஹா செத்தோம் டா இன்னைக்கு நினைச்சேன்... அப்பறம் பார்த்தா ID Card சட்டை பையினுள் திருப்பி வைத்து இருந்தேன்....எடுத்து வெளியில் விட்டுட்டு மிகவும் பயத்துடன் சார் அருகில் சென்றேன். இப்ப கேட்காதீங்க அப்ப நான் சுமார் 44 கிலோ தான் இருப்பேன், என் ரெண்டு காதையும் அப்பிடியே ரெண்டு கைகளால் பிடிச்சு வாலிபால்(volleyball) ல சர்வீஸ் போடுவாங்க இல்ல அதே மாதிரி மேல தூக்கி கழுத்து உடம்போடு இணையும் இடத்தில் ஓங்கி ஒரு அடி அடிச்சார் பாருங்க.... யப்பா!!!!!!! இன்னும் வலிக்குது.

அவ்வளவு வெறுப்பை ஒரு சிறு காரணத்திற்காக ஒரு நொடி பொழுதில் எதற்காக என் மீது கட்டவிழ்தார் என்பது எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் கழிந்த பின்பே புலப்பட்டது....